Friday, 8 June 2007

துடிக்கும் இதயம்


நோக்கும் திசையெல்லாம்
உன் உருவம்
பரவசத்தில் கண்விழித்து
நோக்கும் முன்
கண் இமைக்கும் பொழுதில்
மறையும் உன் பிம்பம்
எதிரில் வரும் உருவமெல்லாம் - நீ
நம் காதலை வாழவைக்க...
என்னிடம் வா
என் உயிரே
நாயகனே
உன்னை நினைக்காத நொடியேது?
புது உறவு வந்து
புது வசந்தம் வீசும்மென்று
புது கணக்கு போட்டேன்
என் நேரமும் விழியுறங்காமல்,
விழிவீங்கி கதிகலங்கி
மனம் புலம்பி,
இதயத்தில் இடிந்து சரிகிறேன்!
மீண்டும் மீண்டும் உன் நினைவுகள்
என்னை காயப்படுத்த
இரக்கமில்லாததா இதயமா?
காதல் கொடூரமானதா?
கவிதை வடிக்க நான்
கவிதாயினி அல்ல
முகவரி இல்லாமல்
முகவரியை தேடும்
உன் ஜீவன் நான்
விரைவில் வா நாயகனே
என் அருகில்.............

வேண்டும் வேண்டும்


அன்பே
நீ ஒரு குடை மாதிரி
வெயில் காலத்திலும்
மழைக்காலத்திலும்
என் கூடவே
இருக்க வேண்டும்
நீ ஒரு ஆடை மாதிரி
பகலிலும் இரவிலும்
என் மேனியை தழுவியே
இருக்க வேண்டும்
ஆடையில்லாமல்
ஆடிப்பாடி திரிந்த
அந்த முதல் காதல் ஜோடி
ஆதாம் ஏவாலை சந்திக்க
ஆசை
அந்த
ஆணந்த நிர்வாணத்தை
அவர்களிடம் வாங்கி வந்து
அப்படியே நாமும்
அணிந்து பார்க்க
ஆசை
அன்பே
உன் பெயரெழுதும் போதெல்லாம்
என் பேனா பெருமை கொள்கிறது.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது